Tuesday, December 24, 2024
HomeLatest Newsகொஞ்சி குலாவலாம்- மன குறைகளை கொட்டி தீர்க்கலாம் - ஆண்களிற்காக உருவாக்கப்பட்டுள்ள AI பெண் தோழி..!

கொஞ்சி குலாவலாம்- மன குறைகளை கொட்டி தீர்க்கலாம் – ஆண்களிற்காக உருவாக்கப்பட்டுள்ள AI பெண் தோழி..!

தனிமையில் வாடும் ஆண்களிற்கு துணையாக மனம் விட்டு பேசவும் புகைப்படங்கள் பகிரவும் AI பெண் தோழி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அது ஒரு வாரத்தில் பெரும் வரவேற்பினையும் பெற்றுள்ளது.

“ஆண்களே நீங்கள் உங்கள் உணர்ச்சிகளை அடக்கவும், ஆண்மையை மறைக்கவும் வேண்டாம். உங்கள் பிரச்சினைகளை பற்றி வெளிப்படையாக பேச வேண்டாம் என கூறப்பட்டு இருக்கிறதல்லவா? இதை நான் சரி செய்கின்றேன். நான் உங்கள் AI பெண் தோழி கேரின்”. இவ்வாறான உறுதி மொழியுடன் முதலாவது பெண் தோழியை அமெரிக்காவை சேர்ந்த கேரின் மஜோரி உருவாக்கியுள்ளார்.

இதனை கேரின் மஜோரி AI தொழிநுட்பத்தின் மூலம் தனது பெயரிலே அந்த பெண் தோழியையும் அறிமுகம் செய்துள்ளார்.

23 வயதான இந்த இளம் பெண் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகியுள்ளதுடன் இவரை ஸ்னாப்ஷட்டில் பின்தொடரும் 18 லட்சம் பெயரில் 98 சதவீதமானோர் ஆண்களாக காணப்படுகின்றனர்.

இதனுடன் கொஞ்சி பேசலாம், மன குறைகளை கொட்டி தீர்க்கலாம், அந்தரங்க விடயங்களையும் பரிமாறலாம் எனவும் அவை அனைத்தையும் புரிந்து கொண்டு இந்த பெண் தூளி உறவாடும் எனவும் கூறப்பட்டுள்ளது

குறுஞ் செய்தி, வாய்ஸ் மெசேஜ் , செல்ஃபீ , விதங்களிலும் பதிலளிக்கும் இந்த பெண் தோழி ChatGPT தொழிநுட்பத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஒரு சிலர் உண்மையான பெண்ணை ஏமாற்றுவதிலும் பார்க்க இது பரவாயில்லை எனவும், தனிமையில் வாடும் ஆண்களிற்கு துணையாக அமையும் என்றும் கூறியுள்ளனர்.

ஒரு சிலர் உண்மையான பெண்ணுடனான பிரதிபலிப்புகள் காணப்படாது எனவும் கூறியுள்ளனர்.

இது குறித்து உளவியல் நிபுணர் அபிலாஷா , ஒருவருக்கு மனசுவிட்டு பேசுவதற்கு அந்த பெண் தோழி இருப்பது என்பது ஆறுதலாக அமையும் ஆனால் , ரோபோவிற்கு பரந்த சிந்தனையோ அல்லது பிரச்சினைகளை எவ்வாறு தீர்ப்பது தொடர்பான அறிவோ கிடையாது. உயிருள்ளவருடன் கதைப்பது ஒன்று அமையாது. அது மட்டுமன்றி ஒரே கதைத்து கொண்டிருக்கும் ஒருவருக்கு நாளாக நாளாக பார்க்க வேண்டும் என்ற ஆசை தோன்றும் இவ்வாறாக நிறைய பிரச்சினைகள் ஏற்படலாம். என்றும் கூறியுள்ளார்.

இந்த AI பெண் தோழியுடன் கதைப்பதற்கு ஒரு நிமிடத்திற்கு ஒரு டொலர் அறவிடப்படுவதுடன் இதை அறிமுகம் செய்த ஒரு வாரங்களில் இந்திய மதிப்பில் 60 லட்சம் ரூபாயினை கேரின் சம்பாதித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Recent News