Sunday, January 19, 2025
HomeLatest Newsகோட்டா கோ கமவில் இன்று மாலை மே18 நினைவேந்தல் நிகழ்வு!

கோட்டா கோ கமவில் இன்று மாலை மே18 நினைவேந்தல் நிகழ்வு!

இலங்கையில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் படுகொலையின் 13வது ஆண்டு நினைவேந்தல் இன்றையதினம் நாடளாவிய ரீதியில் பல்வேறு இடங்களிலும் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பு காலிமுகத்திடல் மற்றும் ஜனாதிபதி செயலகம் முன்னால் நடைபெற்றுவரும் கோட்டா கோ கம ஆர்ப்பாட்ட களத்திலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.

இதேவேளை இன்று மாலை 6மணிக்கும் யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளுக்காக மெழுகுவர்த்தி ஏற்றி நினைவு கூறப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Recent News