Monday, January 27, 2025
HomeLatest Newsயாழ் பெரியமாதா தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் நினைவேந்தல்..!

யாழ் பெரியமாதா தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் நினைவேந்தல்..!

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் 4 ம் ஆண்டு நினைவேந்தல் இன்று (21) காலை 8.42 மணியளவில் யாழ் பெரியமாதா தேவாலயத்தில் கரித்தாஸ் கியூடெக் யாழ்ப்பாண இயக்குனர் அருட்தந்தை யூயின் பிரான்சிஸ் தலைமையில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

முதலாவது ஈஸ்டர் குண்டு வெடித்த நேரமான 8.42 மணிக்கு தேவாலய மணி ஒலிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்காக இரு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன் ஈகச்சுடர் ஏற்றப்பட்டது.

இவ் நினைவேந்தலில் யாழ் மாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் , கிறிஸ்தவ மதத் தலைவர்கள் , பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி வேண்டி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

Recent News