Friday, January 24, 2025
HomeLatest Newsபருவநிலை மாற்றம்!! கதி கலங்கும் விஞ்ஞானிகள்!

பருவநிலை மாற்றம்!! கதி கலங்கும் விஞ்ஞானிகள்!

பருவநிலை மாற்றத்தால் நாடுகள் பல சவால்களை எதிர்நோக்கியுள்ளன.

உணவு, எரிசக்தித் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு….இவை அதிகம் முன்வைக்கப்படும் சவால்கள்.

உரிய நடவடிக்கைகள் உடனடியாய் எடுக்கப்படாவிட்டால் மரணங்களும் உடல்நலக் கோளாறுகளும் கூட ஏற்படக்கூடும்.

உலகளவில் அதிகரித்துவரும் வெப்பநிலையைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை அவசியம்.

மக்கள் செழிப்பாய் வாழ்வதற்காக அல்ல, மனித உயிர்கள் பிழைத்திருப்பதற்கே இது அவசியம்.

கடந்த 50 ஆண்டில் கடும் வறட்சியால் உலக நிலப்பரப்பில் சுமார் மூன்றில் ஒரு பங்கு பாழ்படுத்தப்பட்டுவிட்டது.

விவசாயம் மட்டுமல்லாமல் வீடமைப்பு, வாழ்வாதாரம் முதலியவையும் அதனால் பாதிக்கப்பட்டுள்ளன.

2010ஆம் ஆண்டை அதற்கு முந்திய 30 ஆண்டுகளுக்கு முன்புடன் ஒப்பிட்டால், கிட்டத்தட்ட 100 மில்லியனுக்கும் அதிகமானோர் கடும் உணவுத் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

மில்லியன் கணக்கானோர் தண்ணீர்ப் பஞ்சத்தால் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளனர்.

வெப்ப உயர்வால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள தீச்சம்பவங்களும் கூடியுள்ளன.

தொற்றுநோய்களின் பரவல் அதிகரித்துள்ளது.

இத்தகைய பருவநிலை நெருக்கடிகள் ஏற்படுவதற்குப் பல நாடுகளின் அரசாங்கங்கள் துணைபோயிருக்கின்றன என்ற தகவல் அதிர்ச்சியளிக்கிறது.

படிம எரிபொருள் உற்பத்திக்காக 2019இல் கிட்டத்தட்ட 400 பில்லியன் டாலர் நிதிச்சலுகைகளை 86 அரசாங்கங்கள் வழங்கியுள்ளன.

Recent News