Tuesday, December 24, 2024
HomeLatest Newsவிண்வெளி வீரர்களின் சிறுநீரில் இருந்து சுத்தான குடிநீர்...!விஞ்ஞானிகள் சாதனை...!

விண்வெளி வீரர்களின் சிறுநீரில் இருந்து சுத்தான குடிநீர்…!விஞ்ஞானிகள் சாதனை…!

விண்வெளியில் சிறுநீரில் இருந்து சுத்தான குடிநீரை உருவாக்கும் ஆய்வினை விஞ்ஞானிகள் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளனர்.

அந்த வகையில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்களின் சிறுநீரை வடிகட்டுவதன் மூலம் குடிநீரை உருவாக்கும் புதிய தொழில்நுட்பத்தை விஞ்ஞானிகள் பரிசோதனை செய்து வருகின்றனர்.

அந்த அடிப்படையில், விண்வெளி குழுவினரின் சுவாசம் மற்றும் வியர்வையிலிருந்து வெளியேறும் ஈரப்பதத்தை கொண்டே புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இவ்வாறாக அவற்றின் மூலம், மனிதன் அருந்தக் கூடிய நீரை உற்பத்தி செய்யும் பிரைன் பிராசசர் அசெம்பிளி எனும் புதிய தொழில்நுட்பத்தை கண்டறியும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

விண்வெளி நிலையத்தின் சுற்றுச்சூழல் கட்டுப்பாடு மற்றும் உயிர் ஆதரவு அமைப்பை பயன்படுத்தி விஞ்ஞானிகள் குழு இந்த மைல்கல்லை எட்டியுள்ளது எனதும் குறிப்பிடத்தக்கது.

Recent News