Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld Newsசூடானில் உள்நாட்டு போர் - 2 லட்சம் குழந்தைகள் பட்டினியால் இறக்கும் அபாயம்..!

சூடானில் உள்நாட்டு போர் – 2 லட்சம் குழந்தைகள் பட்டினியால் இறக்கும் அபாயம்..!

ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவத்துக்கும், துணை ராணுவ படையினருக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் நிலவியது. இது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உள்நாட்டு போராக
வெடித்தது. இந்த போரில் இதுவரை 1,000-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

மேலும் தொடர்ந்து கலவரம் நடைபெற்று வருவதால் அங்கு கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதன் காரணமாக அங்கு மூன்றில் ஒரு பங்கு பேர் பட்டினியால் சிக்கி தவிப்பதாக கூறப்படுகிறது. இதேநிலை தொடர்ந்தால் வருகிற மாதங்களில் சுமார் 2 லட்சத்து 22 ஆயிரம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் இறக்கக்கூடும் என ஐ.நா.வின் மனிதாபிமான அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே சூடானுக்கு மனிதாபிமான உதவிகளை தொடர்ந்து
வழங்க வேண்டும் என உலக நாடுகளை ஐ.நா.வலியுறுத்துகிறது.

Recent News