சிகரெட்டுகளில் புதிய மாற்றத்தினை கொண்டு வருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அந்த வகையில் கனடாவில் விற்பனையாகும் ஒவ்வொரு சிகரெட்டிலும் சுகாதார எச்சரிக்கை வாசகத்தினை அச்சிடுவதற்கு அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
பொதுமக்கள் மத்தியில் சிகரெட் பயன்பாட்டை குறைக்கும் நோக்குடன் இந்த விழிப்புணர்வு நடவடிக்கையை கனடா அரசு எடுத்துள்ளது.
வழமையாக சிகரெட் பெட்டிகளிற்கு மேல் சுகாதார எச்சரிக்கை வாசகம் அச்சடிக்கப்பட்டிருக்கும் நிலையில் தற்போது ஒவ்வொரு சிகரெட்டிலும் ஒவ்வொரு எச்சரிக்கை வாசகத்தினை அச்சிடுவதற்கு முடிவு செய்துள்ளனர்.
அந்த வரிசையில், ஒவ்வொரு சிகரெட்டிலும் புகையிலையின் புகை தீங்கு விளைவிக்கும் , புகையிலை புற்றுநோய் உருவாக்கும் மேலும் ஒவ்வொரு புகையிலையிலும் விஷம் உள்ளது போன்ற வாசகங்கள் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் அச்சிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை தொடர்பாக பேசிய அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சர் 2035 ஆம் ஆண்டுக்குள் புகையிலை நுகர்வை ஐந்து சதவீதத்திற்கும் குறைவாக குறைக்கப்பட வேண்டும் என்பதே எமது இலக்கு என்று தெரிவித்தார்.