பாடசாலை மாணவர்களுக்கு இலவச இ-சிகரெட் வழங்கும் நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்படும் என்று இங்கிலாந்தின் பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இங்கிலாந்து நாட்டில் 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களிற்கு சிகரெட் விற்பனை செய்வது சட்ட விரோதமான செயலாக கருதப்படுகின்றது.
ஆயினும், வணிக நோக்கத்திற்காக குழந்தைகளை குறிவைத்து சிகரெட் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
இ-சிகரெட் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றமை தெரிய வந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கு இலவச இ-சிகரெட் வழங்கும் நிறுவனங்களிற்கு தடை விதிக்கப்படும் என்று இங்கிலாந்து பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அது மட்டுமன்றி சில்லறை வியாபாரிகளிற்கு தடை விதிப்பது குறித்தும் அரசு மறு ஆய்வு செய்யும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.