Thursday, January 23, 2025
HomeLatest Newsவண்ண விளக்குகளுடன் பயணத்தை தொடங்கிய கிறிஸ்துமஸ் ரயில்..!

வண்ண விளக்குகளுடன் பயணத்தை தொடங்கிய கிறிஸ்துமஸ் ரயில்..!

உலகம் முழுவதும் டிசம்பர் 25 ஆம் திகதி இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாட தயாராகி வரும் நிலையில் இங்கிலாந்தில் வண்ண விளக்குகளுடன் கிறிஸ்துமஸ் ரயில் பயணத்தை தொடங்கியுள்ளது.  

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வீடுகளில் கிறிஸ்துமஸ் மரங்கள், ஒளிரும் வண்ண விளக்குகள் உள்ளிட்டவை கொண்டு அலங்கரிக்கத் தொடங்கியுள்ளனர்.

அந்த வகையில் இங்கிலாந்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, ‘கிறிஸ்துமஸ் ரயில்’ பயணம் கோலாகலமாக தொடங்கியுள்ளது.

அந்நாட்டில் உள்ள டார்ட்மவுத் நீராவி ரயில்வே நிறுவனத்திற்கு சொந்தமான இந்த ரயிலானது, வண்ண வண்ண ஒளி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நேற்று முதல் இந்த ‘கிறிஸ்துமஸ் ரயில்’ தனது பயணத்தை தொடங்கியுள்ளது. தொடர்ந்து 5 வாரங்களுக்கு இந்த ரயில் சேவை பொதுமக்களுக்கு திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Recent News