சீனாவில் இருந்து தப்பி ஓடிய 60 கிறிஸ்தவர்கள் கொண்ட குழு ஒன்று அமெரிக்காவிடம் அடைக்கலம் கேட்டுள்ளது. மூன்று வருடங்களுக்கு முன் சீன கம்யூனிஸ்ட் கட்சி கிறிஸ்தவர்களை கொலை செய்து வருவதாகவும் இதற்கு தப்பி ஓடி அமெரிக்காவில் தஞ்சம் புகுந்து இருந்ததாகவும் தற்போது மீண்டும் நாட்டிற்கு சென்றால் சீனா அவர்களை தூக்கில் இடும் எனவும் கூறி அமெரிக்காவிடம் அடைக்கலம் கேட்டுள்ளனர்.
குறிப்பிட்ட கிறிஸ்தவ குழுவின் பாதிரியார்கள் கைது செய்யப்பட்டு ஒன்பது வருடங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டதை தொடர்ந்து இவர்கள் நாட்டை விட்டு தப்பி ஓடி வந்ததாகவும் கூறியுள்ளனர்.
ஷென்ஸான் ஹோலி reform சர்ச் உறுப்பினர்களான இவர்கள், முதலில் தென்கொரியாவுக்கு தப்பி ஓடியதாகவும் பின்னர் அங்கு அடைக்கலம் கேட்க முடியாத காரணத்தால் அமெரிக்காவிற்கு சென்றுள்ளதாகவும் விசாரணைகளின் போது குறிப்பிட்டுள்ளனர். சீனா தொடர்ந்து வேற்று மத மக்களை கைது செய்தும், சிறைத் தண்டனை வழங்கி வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.