Wednesday, December 25, 2024
HomeLatest Newsஇலங்கை கடற்பரப்பிற்குள் சீனக் கப்பல்!

இலங்கை கடற்பரப்பிற்குள் சீனக் கப்பல்!

சீனக் கப்பலொன்று நாளை அல்லது நாளை மறுதினம் இலங்கை கடலுக்கு வரவுள்ளதாக கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இலங்கை கடற்பரப்பில் தீப்பிடித்து மூழ்கிய எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் இடிபாடுகளை மீட்பதற்காக இந்தக் கப்பல் நாட்டிற்கு வரவுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.

இடிபாடுகள் அகற்றப்படும் வரை இந்தக் கப்பல் இலங்கைப் பெருங்கடலில் பல மாதங்கள் இருக்கும் என்றும் அதன் தலைவர் சட்டத்தரணி தர்ஷனி லஹந்தபுர தெரிவித்தார்.

இதேவேளை, கப்பலில் தீப்பற்றியதையடுத்து சிதறிய 1700 மெற்றிக் தொன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு நீர்கொழும்பு, பமுனுகமவிற்கு அருகில் உள்ள கழிவு சேமிப்பு முற்றத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆய்வகங்களில் கழிவுகள் பிரிக்கப்பட்டு பரிசோதிக்கப்படும் என்றும் அதன் பின்னர் அதனை அகற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தர்ஷனி லஹந்தபுர தெரிவித்தார்.

Recent News