சிலி தலைநகர் சாண்டியாகோவில் சீன வண்ண ஒளித் திருவிழா தொடங்கியது.
சீனாவிற்கும் சிலிக்கும் இடையிலான 52 ஆண்டுகால உறவை நினைவுபடுத்தும் விதமாக பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வண்ண ஒளித்திருவிழாவில் சீன கலாச்சாரத்தினை பிரதிபலிக்கும் வகையில் அந்நாட்டு கைவினைக் கலைஞர்களின் கைவண்ணங்களில் பல வடிவங்களில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட விதவிதமான கலைப்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
கண்ணைப்பறிக்கும் வண்ண ஒளியில் மின்னிய பொம்மைகள், அலங்காரங்களைக் கண்டு பார்வையாளர்கள் வியந்தனர்.