Tuesday, December 24, 2024

அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் சீனா…!அச்சத்தில் உலக நாடுகள்…!

சீனா அணு ஆயுதங்களை அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

அந்த வகையில், சர்வதேச அளவில் அணு ஆயுதங்கள் குறித்து ஒரு பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், அதில் சீன தன் அணு ஆயுதங்களை கணிசமானவளவு அதிகரித்துள்ளதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும் அணு ஆயுதப் போர் குறித்த அச்சம் உலகளவில் அதிகரித்து வரும் நிலையில் எந்தவொரு நாடாயினும் அணுவாயுத தாக்குதலை ஆரம்பித்தால் கூட அது பூமியில் பாரிய அழிவை ஏற்படுத்துமென வல்லுனர்கள் எச்சரித்து வருகின்றனர்.

அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடுகள் தங்களிடமுள்ள ஆயுதங்களை தாமாக முன்வந்து அழிக்க வேண்டுமென பல்வேறு தரப்பும் வலியுறுத்தி வருகின்றனர்.

இது குறித்து சர்வதேச அமைதி ஆராய்ச்சி.நிறுவனத்தின் இயக்குனர் டான் சிமித், சர்வதேச ரீதியாக அணு ஆயுதங்களின் எண்ணிக்கை ஒட்டுமொத்தமாக குறைந்து வருவது நல்ல போக்கு என சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை பிரிட்டன் , சீனா , பிரான்ஸ் , இந்தியா , இஸ்ரேல் , வடகொரியா , பாகிஸ்தான் , ரஷ்யா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் இப் பட்டியலில் உள்ளடங்குகின்றன.

2022 ஆம் ஆண்டளவில் சர்வதேச அளவில் 12710 ஆக அணு ஆயுதங்கள் காணப்பட்டதுடன் தற்போது 2023 இல் 12512 ஆயுதங்களே காணப்படுகின்றன.

இருப்பினும் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுடன் ஒப்பிடுகையில் சீனாவிடம் ஆயுதங்கள் கணிசமானவளவே காணப்டுகின்றமை சுட்டிக் காட்டத்தக்கது.

Latest Videos