Thursday, January 23, 2025
HomeLatest Newsஎந்தவிதமான உள்நோக்கமும் இன்றி இலங்கைக்கு சீனா உதவும்!

எந்தவிதமான உள்நோக்கமும் இன்றி இலங்கைக்கு சீனா உதவும்!

சீன அரசாங்கம் எந்தவிதமான உள்நோக்கமும் இன்றி இலங்கைக்கு தொடர்ந்து உதவி செய்து வருவதாக இலங்கைக்கான சீனாவின் பதில் தூதுவர் ஹு வெய் தெரிவித்துள்ளார்.

அக்குறணை மற்றும் பாததும்பர பிரதேச செயலாளர் பிரிவுகளில் 1,600 குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான உலர் உணவுகளை வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேலும் வலியுறுத்தினார்.

சுமார் 1,600 வருட வரலாற்றைக் கொண்ட இலங்கை-சீன நட்புறவை மேலும் வலுப்படுத்துவது சீன அரசாங்கத்தின் நம்பிக்கையாகும்.கடந்த வருடம் மட்டும் பத்தாயிரம் மெட்ரிக் தொன் அரிசி, டீசல் எரிபொருள், மருந்து, பாடசாலைக்கான துணிகள் கையிருப்பு. 

சீருடைகள் போன்றவை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் மேலும் பலவற்றை வழங்கவுள்ளதாக சீன தூதுவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அக்குரணை பிரதேச செயலாளர் இந்திக்க அபேசிங்க, பாததும்பர பிரதேச செயலாளர் தக்சிலா வீரகோன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Recent News