Thursday, January 23, 2025
HomeLatest NewsWorld Newsகாசா போர் குறித்த பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்திற்கு தலைமை தங்கும் சீனா..!

காசா போர் குறித்த பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்திற்கு தலைமை தங்கும் சீனா..!

சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யீ இந்த வாரம் நியூயோர்க் சென்று காசா போர் தொடர்பான ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை நடத்த உள்ளார்.

இந்த மாதம் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலின் சுழலும் தலைமைப் பதவியை வகிக்கும் நிலையில், பாலஸ்தீன-இஸ்ரேல் விவகாரம் தொடர்பாக சீனா உயர்மட்டக் கூட்டத்தை நவம்பர் 29-ஆம் தேதி நடத்தும் என்று அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் தெரிவித்தார்.

பேச்சுவார்த்தைகள் சண்டைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்பதோடு காசாவில் மனிதாபிமான நெருக்கடியைத் தணிக்க பங்களிப்பு செய்யும் என்றும் வென்பின் கூறினார். சீனா இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலுக்கு இரு நாடுகளின் தீர்வுக்கு பலமுறை அழைப்பு விடுத்துள்ளதோடு ஜனாதிபதி ஜி ஜின்பிங்கும் சண்டையை தீர்க்க சர்வதேச அமைதி மாநாட்டிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Recent News