Sunday, December 29, 2024
HomeLatest Newsகொரோனா தொற்றுக்கு முதலே பாதுகாப்பு கருவிகளை பதுக்கிய சீனா-வலுக்கும் சந்தேகம்!

கொரோனா தொற்றுக்கு முதலே பாதுகாப்பு கருவிகளை பதுக்கிய சீனா-வலுக்கும் சந்தேகம்!

கொரோனா தொற்று உத்தியோகபூர்வமாக வெளிப்படையாக அறிவிக்கப்படுவதற்கு முன்னரே சீனா பல நாட்களுக்கு முன் தன் நாட்டில் இருந்த சுகாதார பாதுகாப்பு கருவிகளை பத்துக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்ததாக அண்மையில் சில ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா தொற்று ஆரம்பிக்கப்பட்ட காலப்பகுதி மற்றும் ஆரம்பமாகிய இடம் தொடர்பில் சீனா வெளிப்படைத்தன்மையை பேணவில்லை எனவும் சில தரவுகளை அளித்து உள்ளது எனவும் அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகள் குற்றம் சாட்டி வருகின்ற நிலையில், தற்போதைய இந்த ஆதாரங்கள் புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளன.

2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் வழமையாக வெளிநாடுகளிற்கு சீனாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் சுகாதார பாதுகாப்பு கருவிகள் 50 வீதம் ஏற்றுமதி குறைக்கப்பட்டு இருந்ததாக தற்போது அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

இந்த விடயத்தை அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு துறை சுகாதார அதிகாரி டாக்டர் டாம்மக்கியன் மற்றும் அமெரிக்க மூத்த ஆய்வாளர் ஜான் hoffman ஆகியோர் தற்போது பகிரங்கப்படுத்தி உள்ளனர். அவர்கள் சுட்டிக் காட்டும்போது, இவ்வாறாக ஏற்றுமதிகள் குறைந்திருந்த அதே காலப் பகுதியில் சீனா ஆஸ்திரேலியா,  அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிடம் இருந்து சுகாதாரப் பாதுகாப்பு கருவிகளை அதிகளவு கொள்வனவு செய்து இருந்ததாகவும் கூறியுள்ளனர்.

கொரோனா தொற்று டிசம்பர் மாதம் முதலே ஆரம்பிக்கப்பட்டது என சீனா குறிப்பிட்டு வந்த நிலையில் தற்போதைய இந்த தரவுகள் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

Recent News