Tuesday, December 24, 2024

அமெரிக்காவின் முக்கிய உள்கட்டமைப்புகளில் உளவு பார்க்கும் சீனா…!

அமெரிக்காவின் முக்கிய உள்கட்டமைப்புகளில் சீனா மின்னிலக்க முறையில் உளவு பார்ப்பதாக Microsoft நிறுவனமும் அமெரிக்க வேவுத்துறை அமைப்புகளும் குற்றஞ்சாட்டியுள்ளன.

சீன அரசாங்கத்தின் ஆதரவு பெற்ற ஊடுருவிகள் தகவல்களைச் சேகரிக்க குவாம் உள்ளிட்ட பல இடங்களில் தீங்கு விளைவிக்கும் மென்பொருள்களை நிறுவியிருப்பதாகவும் அவை கூறியுள்ளன.

அவர்கள் அமெரிக்க இராணுவத்தளம் அமைந்துள்ள குவாமை முக்கியமாகக் குறிவைத்துள்ளனர்.

தைவான் அல்லது தென்சீனக் கடல் பூசலில் அமெரிக்கா எதாவது நடவடிக்கை எடுக்க முற்பட்டதால் குவாம் தான் முக்கியக் களமாக அமையும்.

ஆயினும், இதுவரை மின்னியல் தரவு அல்லது சாதனம் ஏதும் சீர்குலைக்கப்படவில்லை என்று Microsoft கூறியுள்ளது.

இராணுவப் பூசல் நீடிக்கும் சூழலில் வட அமெரிக்காவுக்கும் ஆசியாவுக்கும் இடையே தொடர்பு முறையில் இடையூறு ஏற்படுத்த ஊடுருவிகள் முயற்சி செய்யலாம் என்றும் எச்சரித்துள்ளது.

மேலும் அவை முக்கிய உள்கட்டமைப்பு நிறுவனங்கள் தீங்கு விளைவிக்கும் செயல்களை அடையாளம் கண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளன.

Latest Videos