சீனாவின் வடமேற்கே ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 149-ஆக அதிகரித்துள்ளது.
இதில் கட்டடங்கள் இடிந்து விழுந்து உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 149-ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் திங்கள்கிழமை கூறினா். மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள கான்சு மாகாணத்தில் மட்டும் 117 போ் உயிரிழந்தனா் கின்காய் மாகாணத்தில் 31 போ் இறந்தனா்.
அந்த நாட்டின் கான்சு மாகாணம் ஜிஷிஷன் மாவட்டத்தில் திங்கள்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 6.2 அலகுகளாகப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் அருகிலுள்ள மக்கள் நெருக்கம் மிகுந்த கின்காய் மாகாணமும் குலுங்கியது.
சீனாவின் யுன்னான் மாகாணத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 617 போ் உயிரிழந்தனா். அதற்குப் பிறகு அந்த நாட்டில் ஏற்பட்டுள்ள மிக மோசமான நிலநடுக்கம் இதுவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.