Wednesday, January 22, 2025
HomeLatest Newsஇலங்கைக்கு உதவ முன்வந்துள்ள சீனா!

இலங்கைக்கு உதவ முன்வந்துள்ள சீனா!

இலங்கையின் கடன் சுமையை இலகுபடுத்துவது தொடர்பில் உதவுவதற்கு தயாராக உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

மேலும், இந்த விடயம் தொடர்பில் உரிய நாடுகள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களுடன் இணைந்து செயற்பட தயாராக உள்ளதாகவும் சீனா குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், இலங்கையின் நிலையான சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தியில் ஆக்கப்பூர்வமான பங்கை வகிக்க தயாராக உள்ளதாகவும் சீனா தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் முறையான கடன் மீள் செலுத்துகை தொடர்பில் இலங்கையுடன் தொடர்புடைய நிறுவனங்களுடன் கலந்துரையாடல்களை முன்னெடுக்க தயாராக உள்ளதாகவும் சீனா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent News