சீனாவின் தொழிநுட்பம் நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து கொண்டே செல்லுகின்ற சூழலில் தற்போது நீர் மூழ்கி ட்ரோன்களை கண்டுபிடித்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆளில்லா வான்வெளி விமானங்கள், ஆளில்லா தரை வாகனங்களைத் தொடர்ந்து ஆளில்லா நீர் மூழ்கி கப்பல்களை தயாரிக்கும் பணிகள் சீனாவில் மும்முரமாக நடைபெற்று வருவதாக தெரிய வருகின்றது.
சர்வதேச செயற்கைக் கோள்களின் உதவியுடன் பெறப்பட்ட படங்களினூடாக பார்க்கின்ற போது சீனாவில் உள்ள ஹைனான் தீவின் சான்யா என்னும் பகுதியில் மேற்படி ஆளில்லா நீர்மூழ்கி ட்ரோன்களுக்குரிய கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தென் சீனக் கடற் பகுதியில் சீனா தற்போது பெரும் கொந்தளிப்பை உருவாக்கி வருகின்றமை தொடர்பில் பல விமர்சனங்கள் சர்வதேச ரீதியில் முன் வைக்கப்பட்டு வருகின்றது.
குறிப்பாக தாய்வான் மற்றும் இந்தியாவிற்கு எதிராக சீன கடல் நடவடிக்கைகள் அமைதியற்ற சூழலை உருவாக்கி வருகின்றது. இந்த நிலையில் சீனாவின் இந்த நீர்மூழ்கி ட்ரோன்களின் கண்டுபிடிப்பு பாரிய எதிர்கால இராணுவ நடவடிக்கைக்கு முன்னேற்பாடு என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.