Tuesday, January 28, 2025
HomeLatest Newsஇலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு சீனாவே காரணம்! தைவான் பகிரங்க குற்றச்சாட்டு

இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு சீனாவே காரணம்! தைவான் பகிரங்க குற்றச்சாட்டு

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு கொரோனாப் பெருந்தொற்று தான் காரணம் என இலங்கை அரசாங்கம் தெரிவிக்கின்றது.

ஆனால் சீனாவிடம் இருந்து இலங்கை அதிக கடனை வாங்கியதும், அரசியலை முறையாக செய்யாமையுமே இந்த நிலமைக்கான காரணம் என தைவான் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தைவான் அரசாங்கம் தமது பிரஜைகளை தெற்காசிய நாடுகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையின் தற்போதைய சூழ்நிலை காரணமாகவே இவ்வாறு அறிவித்துள்ளது.

மேலும் இலங்கையில் தற்போது சுமார் 60 தைவான் பிரஜைகள் இருப்பதாவும் அவர்களுக்கான உதவிகளை தமது அரசாங்கம் செய்யும் எனவும் தெரிவித்துள்ளது.

இலங்கையில் வசிக்கும் தாய்வான் வர்த்தகர் ஒருவர் ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கையில், இலங்கையில் நிலவும் மின்சார, எரிபொருள் தட்டுபாடு காரணமாக கடந்த சில மாதங்களாக தமது தொழிலை நடாத்தி செல்ல முடியாமல் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Recent News