Thursday, December 26, 2024
HomeLatest Newsஇறப்பதற்கு கூட சீனா உகந்ததல்ல : சீனாவை அசிங்கப்படுத்திய தலாய் லாமா

இறப்பதற்கு கூட சீனா உகந்ததல்ல : சீனாவை அசிங்கப்படுத்திய தலாய் லாமா

கடந்த வியாழக்கிழமை திபெத் டைலலாம, அதாவது திபெத்திய மூத்த சமய தலைவர், நிகழ்வில் உரையாற்றும் போது வெளியிட்டிருந்த கருத்திலே, தான் இறக்கும் போது சீனாவை விட இந்தியாவில் இறக்க விரும்புவதாகக் கூறியுள்ளார்.

இவரது கருத்துப்படி, தனது கடைசி மூச்சை சுவாசிக்கும் போது, இந்தியா போன்ற ஒரு உண்மையான ஜனநாயக நாட்டில், இந்திய மக்கள் போல அன்பானவர்கள் மத்தியில் இருக்க வேண்டும் எனத் தான் விரும்புகின்றேன் எனவும், சீனாவின் போலி அதிகாரிகளிற்கு மத்தியில் இருப்பதை விட இது தனக்கு சிறந்தது எனவும் பகிரங்கமாகக் கூறியுள்ளார்.

இது சீனாவிற்கு பலத்த அவமானமாகப் பார்க்கப்படுகிறது. ஹிமாச்சல் பிரதேசத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்ற ஐக்கிய அமெரிக்க அமைதி ஸ்தாபனத்தின் இளைஞர் குழுவிற்கு இவர் உரையாற்றிய போதே இதனைக் கூறியுள்ளார்.

மேலும் இதனை இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் தான் கூறியிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். 1950 ஆம் ஆண்டு சீனா திபெத்தை ஆக்கிரமித்த போது, டைலாலமாவிற்கு இந்தியா ஆதரவு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recent News