Thursday, January 23, 2025
HomeLatest Newsதமது வீரர்களை வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பிய சீனா!

தமது வீரர்களை வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பிய சீனா!

விண்வெளியில் தங்கியிருந்து ஆய்வு செய்யும் பணிக்காக பல நாடுகளுடன் இணைந்த கூட்டுத் திட்டத்தின்படி ரஷ்யா சர்வதேச விண்வெளி நிலையத்தை அமைத்துள்ளது.

நீண்ட கால ஆய்வுக்கு பின்னர் அடுத்த சில வருடங்களில் ரஷ்யாவின் விண்வெளி நிலையம் ஓய்வு பெறும் என கூறப்படுகிறது.

இதையடுத்து ரஷ்யாவிற்கு போட்டியாக புவி சுற்றுப் பாதையில் விண்வெளி நிலையம் அமைக்கும் பணிகளில் சீனா தீவிரம் காட்டு வருகிறது.

இந்த ஆண்டு இறுதிக்குள் அந்த பணிகள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக கடந்த ஜூன் மாதம் ஷென்சோ-14 குழுவை சீனா விண்வெளிக்கு அனுப்பியிருந்தது.

அதன் தொடர்ச்சியாக நேற்று வடமேற்கு சீனாவில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதள மையத்தில் இருந்து ஷென்சோ-15 விண்கலத்துடன் இணைந்த ஒய்15 கேரியர் ராக்கெட் மூலம் விண்வெளிக்கு மூன்று வீரர்களை சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் அனுப்பியது.

இந்த நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. விண்கலத்தை ஏவும் பணி சில நிமிடங்களில் வெற்றிகரமாக நடந்ததாக கட்டுப்பாட்டு அறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

விண்வெளிக்கு சென்றுள்ள ஷென்சோ-15 குழுவை சேர்ந்த வீரர்கள், ஏற்கனவே அங்கு தங்கியுள்ள 3 வீரர்களுடன் இணைந்து கட்டுமான பணிகளை மேற்கொள்வார்கள் என தெரிகிறது.

கட்டுமானத்தில் இருக்கும் விண்வெளி நிலையத்தில் ஆறு விண்வெளி வீரர்கள் ஒரே நேரத்தில் தங்கியிருப்பது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.

Recent News