இலங்கை பெரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருவதை கருத்திற் கொண்டு இலங்கையில் உள்ள பௌத்த விகாரைகள் மற்றும் பிக்குகளுக்கு உதவ சீனா முன்வந்துள்ளது.
இதற்கு சீன பௌத்த சங்கம் உதவ முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இலங்கைக்கான சீனத் தூதுவர் கண்டி மல்வத்து மகாநாயக்க தேரரைச் சந்தித்து ஆசிபெற்ற பின் இதனைத் தெரிவித்துள்ளார்.