Friday, January 24, 2025
HomeLatest Newsஉலகின் முன்னணி கார் ஏற்றுமதியாளரான ஜப்பானை தட்டி தூக்கிய சீனா..!

உலகின் முன்னணி கார் ஏற்றுமதியாளரான ஜப்பானை தட்டி தூக்கிய சீனா..!

உலகின் முன்னணி கார் ஏற்றுமதியாளராக திகழ்ந்த ஜப்பானை பின் தள்ளி சீனா முதலிடத்தை தன்வசமாகியுள்ளது.

2023 முதல் காலாண்டில் 1.07 மில்லியன் கார்களை ஏற்றுமதி செய்துள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் அந்த காலகட்டத்தில், ஜப்பான் 954,185 கார்களை மட்டுமே ஏற்றுமதி செய்துள்ளது.

இதற்கிடையில், பெட்ரோலில் இயங்கும் கார்களுக்குப் பதிலாக மின்சார கார்களுக்கு சீனா முன்னுரிமை வழங்கியமை அவர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தற்போது, ​​உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் தங்கள் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய முன்னுரிமை அளித்துள்ளன.

2022 ஆம் ஆண்டில், சீன மின்சார கார்களின் ஏற்றுமதி முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது 90 சதவீதம் அதிகரித்தது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Recent News