பாகிஸ்தான் தற்சமயம் பாரியளவு பொருளாதார நெருக்கடிக்குட்பட்டுள் நிலையில் சீனாவிடமிருந்து ஒரு பில்லியன் அமெரி்க்கா டொலர்கள் கடனாகக் கிடைத்துள்ளது. இதனை பாகிஸ்தான்உறுதிப்படுத்தினாலும் இது தொடர்பான மேலதிக விபரங்களை வெளியிடவில்லை.
பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கே இடர்படும் நிலையுள்ளது. இதேவேளை சர்வதேச நாணய நிதியத்தின் கடனும் கிடைப்பது சாத்தியமற்றதொன்றாகியுள்ளது
இதேவேளை பாகிஸ்தானின் அந்நிய செலாவணி கையிருப்பு 3.9 பில்லியன் அமெரிக்கா டொலர்களாக குறைந்துள்ள நிலையில் இக் கடன் தொகையானது பாகிஸ்தானுக்கு ஓரளவு ஆறுதளளிக்கும் விடயமாகவுள்ளது.
முன்னர் சீனாவிற்கு செலுத்த வேண்டிய 1.3 அமெரிக்கா டொலர் நிலுவையில் 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அந்தத் தொகை மீளவும் தமக்குக் கிடைக்குமென பாகிஸ்தான் நிதியமைச்சர் இஷாக் டார் தெரிவித்திருந்தார்.
இதேவேளை 2019 ம் ஆண்டு பாகிஸ்தானு்கு சர்வதேச நாணய நிதியம் 6.5 மில்லியன் அமெரிக்க டொலர் பிணை எடுப்புத் தொகையை வழங்க ஒப்புக்கொண்ட நிலையில் மீதமுள்ள 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு பல நிபந்தனைகளையும் வரம்பெல்லைகளையும் விதித்திருந்த நிலையில் பலவற்றை பாகிஸ்தான் அரசு நிறைவேற்றியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.