Sunday, February 23, 2025
HomeLatest NewsWorld Newsகாஸாவில் நிலைமையை விரைந்து சீர்படுத்த உலக நாடுகளுக்கு சீனா அழைப்பு..!

காஸாவில் நிலைமையை விரைந்து சீர்படுத்த உலக நாடுகளுக்கு சீனா அழைப்பு..!

ஹமாஸ் – இஸ்ரேல் போர் உக்கிரமடைந்து வரும் நிலையில் பலஸ்தீன அதிகாரிகள் இந்தோனேசியா எகிப்து சவூதி அரேபியா மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் குழு இந்த வாரம் பீஜிங்குக்கு சென்றிருந்தது.

அங்கு இஸ்ரேல் – ஹமாஸ் போர் குறித்து விவாதிக்கப்பட்டது. அந்தக் குழுவிடம் பேசிய சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி ”காஸாவில் தற்போது நிலவும் நிலைமையை சரி செய்யவும்இ மத்திய கிழக்கில் விரைவில் அமைதியை மீட்டெடுப்பதற்கும் நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அரபு மற்றும் முஸ்லிம் நாடுகளின் நியாயமான உரிமைகள் மற்றும் நலன்களை நாங்கள் எப்போதும் உறுதியாக பாதுகாத்து வருகிறோம் ” என்ற அவர் காசாவில் நடந்துவரும் மனிதாபிமானமற்ற பேரழிவு குறித்து கவலை தெரிவித்தார்.

மேலும் காஸாவின் நிலைமை உலகெங்கிலும் உள்ள அனைத்து நாடுகளையும் பாதிக்கிறது. சர்வதேச சமூகம் விரைந்து செயல்பட்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.

தற்போதைய பலஸ்தீன – இஸ்ரேல் மோதலில் இருந்து பொதுமக்களைப் பாதுகாப்பது மற்றும் பலஸ்தீனப் பிரச்சினையை நியாயமான முறையில் தீர்ப்பதுதான் இந்தப் பேச்சுவார்த்தையின் குறிக்கோள் எனக் கூறப்படுகிறது.

Recent News