நாடாளுமன்ற கமிட்டிக்கு, வர்த்தக அமைச்சு மற்றும் நாடாளுமன்ற நிலைக்குழு அதிகாரிகள், நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கைகளை நேற்றைய தினம் சமர்ப்பித்திருந்தனர்.
அப்போது, பாகிஸ்தானில் இருந்து கழுதைகள் மற்றும் நாய்களை கொள்வனவு செய்ய சீனா ஆர்வம் காட்டுவதாக நிலைக்குழு உறுப்பினர் தெரிவித்து உள்ளார். மருத்துவம் மற்றும் இறைச்சிக்காக பாகிஸ்தானில் இருந்து கழுதை மற்றும் செல்லப்பிராணி நாய்களை அதிக அளவில் சீனா இறக்குமதி செய்ய விரும்புகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்காக ஆப்கானிஸ்தான் இடம் இருந்து குறைந்த விலைக்கு கழுதைகள் மற்றும் நாய்களை கொள்வனவு செய்து, சீனாவிற்கு ஏற்றுமதி செய்யலாம் என கூட்டத்தில் இரண்டு உறுப்பினர்கள் தமது கருத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.
எவ்வாறாயினும் விலங்குகளில் இலகுவாக நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது என்பதாலும் இதனால் ஏற்றுமதிகள் பாதிப்படையலாம் என்பதாலும் அவ்வாறு ஆப்கானிஸ்தானில் இருந்து கொள்வனவு செய்யும் திட்டம் கைவிடப்பட்டது. பாகிஸ்தான் தொடர்ந்து பொருளாதார நெருக்கடியில் திண்டாடி வந்த நிலையில் வெள்ளப்பெருக்கு காரணமாக மேலும் இந்த நிலை மோசமடைந்துள்ளது. இதனால் பிற நாடுகளுடன் வருத்தம் செய்ய கிடைக்கும் சந்தர்ப்பங்களை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் பாகிஸ்தான் உறுதியாக உள்ளது.