Thursday, January 23, 2025
HomeLatest NewsWorld Newsசென்னை – கொழும்பு விமான சேவைகள் இரத்து !

சென்னை – கொழும்பு விமான சேவைகள் இரத்து !

ஒரே நாளில் சென்னைக்கும் (chennai) கொழும்பு கட்டுநாயக்கவுக்கும் இடையில் சேவையில் ஈடுபடும் 4 விமான சேவைகள் முழுமையமாக இரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.விமானத்தில் பயணிக்க போதிய பயணிகளின் இல்லாத காரணத்தினாலேயே விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கொழும்பில் (colombo) இருந்து, சென்னை விமான நிலையத்துக்கு இன்று அதிகாலை 2.10 மணி மற்றும் மாலை 3.05 மணியளவில் 2 சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் சேவைகளில் ஈடுபடவிருந்தன.அத்துடன், சென்னை விமான நிலையத்தில் இருந்து, இலங்கை தலைநகர் கொழும்புக்கு அதிகாலை 3.10 மணி மற்றும் மாலை 4.10 மணியளவில் இரண்டு சிறிலங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines) விமானங்கள் சேவைகளும் போதிய பயணிகள் வருகை இல்லாமல் ரத்து செய்யப்பட்டன.

தற்போது கோடை விடுமுறை முடிந்துவிட்ட நிலையில், இலங்கை செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளமையும் இதற்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent News