Friday, November 15, 2024
HomeLatest NewsIndia Newsதிருமணமான பெண்ணை ஏமாற்றுவது குற்றம் இல்லை...!உயர் நீதிமன்றம் அதிரடி...!

திருமணமான பெண்ணை ஏமாற்றுவது குற்றம் இல்லை…!உயர் நீதிமன்றம் அதிரடி…!

திருமணமான பெண்ணை ஏமாற்றுவது குற்றமில்லை என கர்நாடகா உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்த 28 வயதான பிரஜித் என்பரிற்கு திருமணமான பெண் ஏற்பட்டுள்ளது.

அதையடுத்து திருமணம் செய்து கொள்ளவதாக கூறி பிரஜித் அந்த பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளதுடன் வெளிநாட்டில் வேலை கிடைத்ததும் அவருடன் தொடர்பை துண்டித்துள்ளார்.

இதனால், பாதிக்கப்பட்ட பெண் பொலிஸாரிடம் புகாரளிக்க அதன் அடிப்படையில் பிரஜித் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்த வழக்கினை இரத்து செய்ய கோரி கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் பிரஜித் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு நேற்றைய தினம் நீதிமன்றத்தில் நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில் விசாரணைக்கு வந்த நிலையில், ஏற்கனவே திருமணம் ஆகியுள்ள நிலையில் விவாகரத்து பெறாது வேறு ஒரு நபரை திருமணம் செய்ய நினைக்கும் பெண்ணை ஏமாற்றுவது குற்றமில்லை என தெரிவித்துள்ளார்.

அதனால், மனுதாரர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கும் தள்ளுபடி செய்யப்படுவதாக உத்தரவிட்டுள்ளார்.

Recent News