Tuesday, December 24, 2024
HomeLatest Newsதிருமணத்தை சிறப்பாக நடத்தி வைத்த ChatGPT..!திக்குமுக்காடும் இணையவாசிகள்..!

திருமணத்தை சிறப்பாக நடத்தி வைத்த ChatGPT..!திக்குமுக்காடும் இணையவாசிகள்..!

இளம் ஜோடிகளின் திருமணத்தை ChatGPT இயந்திரம் மிகவும் சிறப்பான முறையில் நடத்தி வைத்துள்ளமை இணையவாசிகளை திக்குமுக்காட வைத்துள்ளது.

அண்மைக் காலமாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் ChatGPT மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு பேசப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், ChatGPT ஐ வைத்து வித்தியாசமான முறையில் திருமணம் செய்து கொள்வதற்கு ஒரு ஜோடி முடிவு செய்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த ரீஸ் வீஞ்ச் மற்றும் டெய்டன் ட்ரூட் ஜோடியே இவ்வாறு முடிவு செய்துள்ளது.

இதையடுத்து, அவர்களது திருணம் குடும்பத்தினரின் முழு சம்மதத்துடன் கடந்த வாரம் திருமணம் நடைபெற்றுள்ளது.

அதாவது,இவர்களின் திருமணம் வழமைக்கு மாறாக தேவாலயத்தில் வைத்து அருட் தந்தைக்கு பதிலாக ChatGPT யின் உதவியுடன் இயங்கும் இயந்திரம் மூலம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், வரவேற்புரையுடன் திருமணத்தை தொடங்கிய அந்த இயந்திரம் திருப்பலியுடன் திருமண விழாவை நிறைவு செய்துள்ளது.

இந்த திருமணம் குறித்த காணொளிகள் சமூக வலைதளத்தளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகின்றது.

Recent News