Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld Newsதாய்வான் நாடாளுமன்றத்தில் பரபரப்பு..!!

தாய்வான் நாடாளுமன்றத்தில் பரபரப்பு..!!

தாய்வானின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள லாய்சிங் எதிர்வரும் திங்கட்கிழமை பதவியேற்கவுள்ள நிலையில் தாய்வான் நாடாளுமன்றில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.நாடாளுமன்ற சீர்திருத்தம் தொடர்பான விவாதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.தாய்வான் நாடாளுமன்ற சீர்திருத்தங்கள் மீதான வாக்கெடுப்பு ஆரம்பமாவதற்கு முன்னரே அமைதியின்மை ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. வாய்த்தகராறு மோதலாக மாறியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் தாய்வானின் புதிய ஜனாதிபதி லாய்சிங் வெற்றி பெற்ற போதிலும் அவரது ஜனநாயக முற்போக்கு கட்சி நாடாளுமறில் பெரும்பான்மையை இழந்தது.

மேலும் எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை விட நாடாளுமன்றத்திற்கு அதிக அதிகாரத்தை வழங்க விரும்புவதால், நாடாளுமன்றத்தில் பொய்யான அறிக்கைகளை வழங்கும் உறுப்பினர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதற்கான அதிகாரத்தை வழங்குவதற்கான யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

Recent News