Thursday, January 23, 2025
HomeLatest Newsஇலங்கையில் திடீரென பொங்கியெழுந்த கடலலையால் குழப்பநிலை !

இலங்கையில் திடீரென பொங்கியெழுந்த கடலலையால் குழப்பநிலை !

கடல் சீற்றம் காரணமாக மூதூர் – தக்வாநகர் கடற்கரையில் கடலரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன்போது கடற்கரையில் உள்ள மீன்வாடிகள் கடலரிப்பால் சேதமாகியுள்ளதோடு ,பயன்தரும் மரங்களும் சாய்ந்து வீழ்ந்துள்ளன. அத்தோடு கடற்கரையில் உள்ள கட்டடங்களும் வெடிப்புக்குள்ளாகியுள்ளதையும் அவதானிக்க முடிந்தது.

கடல் சீற்றத்தால் மூதூர் மீனவர்கள் கடலுக்குச் செல்வதை தவிர்த்துள்ளனர்.  இதனால் படகுகள் கரையில் ஏற்றி வைக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்தும் மூதூர் கடல் பகுதி சீற்றமாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .

Recent News