Tuesday, January 21, 2025
HomeLatest Newsநாடாளுமன்றத்தில் வழங்கும் உணவில் ஏற்படவுள்ள மாற்றம்

நாடாளுமன்றத்தில் வழங்கும் உணவில் ஏற்படவுள்ள மாற்றம்

நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதன் ஊழியர்கள் மற்றும் நாடாளுமன்றத்திற்கு வருகை தருபவர்களுக்கு குறைந்த விலையில் போஷாக்கான உணவை வழங்குவது தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யப்பா அபேவர்தன கவனம் செலுத்தியுள்ளார்.

உணவு பகிர்ந்தளிக்கும் முறைக்கு பதிலாக மலிவான சோற்று பொதியை வழங்குவது குறித்து சபாநாயகர் பரிசீலித்து வருவதாக நாடாளுமன்றத் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாட்டின் பொருளாதார நிலை மற்றும் நாடாளுமன்ற உணவு தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளமையினால் சபாநாயகர் இவ்விடயத்தில் கவனம் செலுத்தியுள்ளார்.

இது தொடர்பாக சபாநாயகர் ஏற்கனவே பல்வேறு தரப்பினரிடம் தகவல் கோரி வருவதாக தெரியவருகிறது.

நாடாளுமன்றத்தினால் வழங்கப்படும் உணவை இடைநிறுத்துமாறு கோரி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 53 உறுப்பினர்கள் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளனர்.

அதற்கமைய, நாளை மறுதினம் முதல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மதிய உணவை இடைநிறுத்துவதற்கு சபாநாயகர் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் நாடாளுமன்றத்திற்கும் அறிவித்துள்ளார்.

ஏனைய உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் உணவு தொடர்பில் கட்சித் தலைவர்களின் அடுத்த கூட்டத்தில் தீர்மானிக்க சபாநாயகர் திட்டமிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள், விருந்தினர்களுக்கான உணவு மற்றும் பானங்களுக்காகவே நாடாளுமன்றமன்றத்தில் அதிக செலவு செய்வதாக தெரியவந்துள்ளது.

உணவு மற்றும் பானங்களுக்காக வருடாந்தம் செலவிடப்படும் தொகை 120 மில்லியன் ரூபாய் என நிதி பிரிவு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் குடிநீருக்காக வருடாந்தம் 9 மில்லியன் ரூபா செலவிடப்படுவதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

Recent News