Thursday, January 23, 2025
HomeLatest Newsடொலரின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்! மத்திய வங்கி வெளியிட்ட அறிவித்தல்

டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்! மத்திய வங்கி வெளியிட்ட அறிவித்தல்

இலங்கை மத்திய வங்கியின் இன்றைய நாணய மாற்று விகித அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 356 ரூபா 12 சதமாகவும், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 367 ரூபா 16 சதமாகவும் பதிவாகியுள்ளது.

இதேவேளை, மற்ற வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் பெறுமதியில் சற்று ஏற்ற, இறக்கம் காணப்படுகின்றது.

பிரித்தானிய பவுண்ட் ஒன்றின் விற்பனை பெறுமதி 452 ரூபா 61 சதமாகவும் அதேசமயம் பிரித்தானிய பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 435 ரூபா 46 சதமாக பதிவாகியுள்ளது.

யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 388 ரூபா 41 சதமாக பதிவாகியுள்ளதுடன் யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 373 ரூபா 29 சதமாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent News