Saturday, January 25, 2025
HomeLatest Newsசமையல் எரிவாயு விலையிலும் மாற்றம் - வெளியான அறிவிப்பு..!

சமையல் எரிவாயு விலையிலும் மாற்றம் – வெளியான அறிவிப்பு..!

சமையல் எரிவாயுவின் விலை இன்னும் சில தினங்களில் குறையும் என ஜனாதிபதி அலுவலகத்தின் பிரதானியும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகருமான சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றிய இவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன், பணவீக்கம் 70 சத வீதத்திலிருந்து 35 சத வீதமாக குறைந்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் அதை ஒற்றை இலக்கத்துக்கு கொண்டு வர முயற்சிக்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

குறித்த கூட்டத்தில் உரையாற்றிய சாகல ரத்நாயக்க, ‘எண்ணெய் விலை குறைந்துள்ளதால், அடுத்த சில நாட்களில் எரிவாயுவின் விலையும் குறையும் என நம்புவதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recent News