Monday, December 23, 2024
HomeLatest Newsசந்திரமுகி பொம்மி...மம்மி ஆகிவிட்டாரா? வைரலாகும் கியூட் புகைப்படம்

சந்திரமுகி பொம்மி…மம்மி ஆகிவிட்டாரா? வைரலாகும் கியூட் புகைப்படம்

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் தான் சந்திரமுகி. பி.வாசு இயக்கத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான இப்படம் சூப்பர் ஹிட் வெற்றியும் பெற்றது.


 இந்த படத்தில் நயன்தாரா, பிரபு, ஜோதிகா, நாசர் என பலர் இணைந்து நடித்தனர். அத்தோடு  இந்த படத்தில் பொம்மி என்ற கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக பாடல் ஒன்றில் இடம் பெற்றிருந்தவர் தான் பிரகர்ஷிதா. தற்போது வளர்ந்து பெரிய பெண்ணாகி விட்ட இவருக்கு திருமணம் கூட நடந்து விட்டது. 

சில வருடங்களுக்கு முன்னால் தான் கர்ப்பமாக இருப்பதாக தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் அறிவித்திருந்தார்.இப்படியான நிலையில் தற்போது கையில் தன்னுடைய குழந்தையுடன் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

இந்த போட்டோக்களைப் பார்த்த ரசிகர்கள் நம்ப சந்திரமுகி பொம்மி மம்மி ஆகி விட்டார் என கமெண்ட் அடித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recent News