Wednesday, January 22, 2025
HomeLatest Newsசேதமடைந்த நாணயத்தாள்களை மாற்றுவது தொடர்பில் மத்திய வங்கி விசேட அறிவிப்பு

சேதமடைந்த நாணயத்தாள்களை மாற்றுவது தொடர்பில் மத்திய வங்கி விசேட அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கியினால் பராமரிக்கப்படும் சேதமடைந்த நாணயத்தாள் மாற்றும் கருமபீடம் புதன்கிழமைகளில் மட்டும் திறந்திருக்கும் என இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது.

2022ம் ஆண்டு மே 19ம் திகதி முதல் புதன் கிழமைகளில் (பொது விடுமுறை தினங்கள் தவிர்த்து) மறு அறிவித்தல் வரை சேதமடைந்த நாணயத்தாள் கருபீடம் பொதுமக்களுக்கு திறந்திருக்கும் என இலங்கை மத்திய வங்கி (CBSL) அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதன்படி, புதன்கிழமைகளில் காலை 9.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை பொதுமக்கள் சேதமடைந்த நாணயத்தாள்களை மாற்றிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Recent News