Thursday, January 23, 2025
HomeLatest Newsதிருமலை ஹெப்பத்திகொலாவ வீதியில் குவிந்த சீமெந்து மூட்டைகள்!

திருமலை ஹெப்பத்திகொலாவ வீதியில் குவிந்த சீமெந்து மூட்டைகள்!

ஹெப்பத்திகொலாவ பகுதியில் சீமெந்து லொறி ஒன்று குடைசாய்ந்து விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 

இன்று (9) இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சீமெந்து ஏற்றிச் சென்ற லொறியொன்று ஹெப்பத்திகொலாவ,  புளியங்குளம் பகுதியில் குடைசாய்ந்து விபத்து  இடம்பெற்றுள்ளதாக ஹெப்பத்திகொலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

இயந்திரக் கோளாறு காரணமாக லொறி கவிழ்ந்ததில் சீமெந்து பைகள் வீதிக்கு அருகில் சிதறியதாகவும் காயமடைந்தவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹெப்பத்திகொலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பிற செய்திகள்

Recent News