Monday, December 23, 2024
HomeLatest NewsIndia Newsபழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த பிரமுகர்…!பொலிஸார் அதிரடி..!

பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த பிரமுகர்…!பொலிஸார் அதிரடி..!

பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த பிரமுகர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலம் சித்தி தொகுதியின் பாஜக எம்.எல்.ஏ கேதார் நாத் சுக்லாவின், பிரதிநிதியான பிரவேஷ் சுக்லா, மதுபோதையில் மனநலம் குன்றிய பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்துள்ளார்.

அந்த நபர், பாஜக எம்.எல்.ஏவின் பிரதிநிதி என்ற காரணத்தால் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் பயத்தினால் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யாது இருந்துள்ளனர்.

இந்நிலையில், அந்த சம்பவம் குறித்த காணொளிகள் சமூக ஊடகங்களில் வைரலான நிலையில் அனைவரது பார்வைக்கும் சென்றுள்ளது.

அதனை தொடர்ந்து, இந்த காணொளியை காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அப்பாஸ் ஹபீஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளதுடன், பழங்குடியின மக்களின் நலன் குறித்து பொய் பேசும் பாஜக தலைவர், பழங்குடியின ஏழை மீது சிறுநீர் கழிக்கின்றார். இது மிகவும் கண்டிக்கத்தக்க செயல் என அவர் கூறியுள்ளார்.

அத்துடன், முதல்வர் சிவராஜ் சிங் சவுகானையும் டேக் செய்துள்ள அவர், இது தான் பழங்குடியினர் மீதான உங்கள் அன்பா? இதை காட்டு தர்பார் என்று அழைக்க வேண்டும். ஏன் பாஜக தலைவரை கைது செய்யவில்லை? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில், இந்த விடயம் மாநில முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் பார்வைக்கு சென்றதை தொடர்ந்து இந்தச் சம்பவத்துக்கு காரணமான குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

அதையடுத்து, தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் (என்எஸ்ஏ) கீழ் பிரவேஷ் சுக்லாவை கைது செய்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recent News