Thursday, December 26, 2024
HomeLatest NewsWorld Newsநெதன்யாஹுவால் வெளியிடப்பட்ட போர் நிறுத்தம் - குழம்பி போனார் பைடன்

நெதன்யாஹுவால் வெளியிடப்பட்ட போர் நிறுத்தம் – குழம்பி போனார் பைடன்

இஸ்ரேலின் காசா மீதான போருக்கு பிந்தைய திட்டங்கள் குறித்து வெளிவந்த அறிக்கைகளை கூட்டாளியும் அமெரிக்க ஜனாதிபதியுமான ஜோ பைடன் பார்வையிட்டதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி அந்தோணி பிலின்கண் கருத்து வெளியிட்டுள்ளார் .

மேற்படி செய்தியாளர்களிடம் பேசிய அந்தோணி பிலிங்கன் நெதன்யாஹூவின் திட்டங்கள் குறித்து அமெரிக்கா அச்சம் கொண்டுள்ளதாக குறிப்பிட்டார் .

மேலும் ஜனாதிபதி ஜோ பைடனும் நெத்தனியாஹு தற்போது எந்த ஒரு கட்டுபாடும் இன்றி தன்னிச்சையாக நினைத்தவற்றை செய்து வருவதாகவும் நிலைமை குறித்து அவர் கவலைப்படுவதில்லை எனவும் பைடன் தெரிவித்ததாக கூறினார் .

நெதன்யாஹு மற்றும் பைடன் இடையே சில நாட்களாக கருத்து விரிசல் நிலவி வருவதாகவும் அவர் மேலும் கூறினார் .

நெட்டன்யாஹு ஹமாசினை காசாவில் இருந்து நிரந்தரமாக அழிக்க முற்படுகிறார் . மேலும் காசா தீவிரவாதிகள் அல்லாதோரால் நிர்வாகிக்க பட வேண்டும் என விரும்புகிறார் .

அதுவே இஸ்ரேலுக்கும் பாதுக்காப்பு என முன்வைக்கிறார் . அவரது கருத்துக்களில் எந்த ஒரு பிழையும் இல்லை என பிலிங்கனும் ஆதரவு வழங்குகிறார் .

Recent News