Friday, November 15, 2024
HomeLatest Newsகூகுள் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய சிசிஐ!

கூகுள் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய சிசிஐ!

கூகுள் (Google) என்பது, அமெரிக்காவில் தலைமையிடத்தைக் கொண்டு செயற்படும் ஒரு பன்னாட்டு நிறுவனம் ஆகும். உலகம் முழுவதும், தேவைப்படும் தகவல்களை எப்போது தேடினாலும் உடனடியாக பதில் அளிக்கும் பணியை கூகுள் நிறுவனம் செய்து வருகிறது. 

அந்நிறுவனம் ஆண்டிராய்டு என்ற இயங்கு தளம் ஒன்றை இயக்கியும், அதன் மேலாண் பணிகளை செய்தும் வருகிறது. இந்த நிலையில், கூகுள் நிறுவனத்திற்கு இந்திய தொழில் போட்டி ஆணையம் நோட்டீஸ் (சிசிஐ) அனுப்பியுள்ளது.

ஆண்ட்ராய்டு போன்கள் தொடர்பாக முறைகேடு மற்றும் ப்ளே ஸ்டோர் கொள்கை முறைகேடு குறித்து விசாரணை செய்த சிசிஐ கடந்த அக்டோபர் மாதம் கூகுள் நிறுவனத்திற்கு 2774 கோடி ரூபாய் அபராதம் விதித்தது. 

இந்த அபராத தொகையை கூகுள் நிறுவனம் செலுத்தத் தவறியதையடுத்து சிசிஐ கூகுள் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த நோட்டீஸ் பெற்ற உடன் கூகுள் நிறுவனம் அபராத தொகையை செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent News