Tuesday, December 24, 2024
HomeLatest Newsசாப்பிட முடியல.. தூங்க முடியல - நித்யானந்தா வேதனை!

சாப்பிட முடியல.. தூங்க முடியல – நித்யானந்தா வேதனை!

நித்யானந்தா வெளியிட்ட பதிவொன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

தமிழ்நாட்டின் திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் நித்யானந்தா சாமியார். 44 வயதான இவர், கர்நாடக மாநிலம், பிடதியில் ஆசிரமம் நடத்தி வந்தார்.

இவர் மீது பல்வேறு பாலியல் பலாத்கார புகார்கள் எழுந்தன. அவற்றில் அவர் கைதாகி ஜாமீனில் வெளிவந்தார்.

பின்னர் அவர் ஈகுவடார் அருகே ஒரு தீவை வாங்கி கைலாசா என்ற இந்து நாட்டை 2019 டிசம்பரில் பிரகடனம் செய்தார். அங்கேயே அவர் வசிக்கவும் தொடங்கினார்.

இவரை சுற்றி எப்போதும் பல சர்க்சைகள் எழுந்தவண்ணமாவே இருக்கும். பாலியல் புகார், ஆள் கடத்தல் வழக்குகள் எனப் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிப் பிரபலமானார். சமீபத்தில் இவர் இறந்து விட்டதாக கூட சர்ச்சை கிளம்பியது.

ஆனால் இவருக்கு உடல் நலம் சரியில்லை என்று கூறப்படுகின்றது.

இந்தநிலையில் தற்போது அவர் அவரது மனநிலை குறித்த பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் பகிர்ந்துள்ள பதிவில்,

என் அன்பான சீடர்கள் மற்றும் பக்தர்கள் அனைவருக்கும், என்னைச் சுற்றிலும் சமாதி நடக்கும் நிகழ்வுகளின் நேரடிக் காட்சியை உங்களுக்கு வழங்க முயற்சிப்பேன்.

உயிர் நிரப்பிய ஒரு பெரிய பலூன் நான். ஆனால் முரண்பாடாக அந்த சிறிய உடலை, என்னால் நகர்த்த முடியவில்லை. அந்த பெரிய காஸ்மிக் பலூனுக்குள் நான் இருக்கிறேன் நான்.

‘என்னுடைய’ அடையாளங்கள் பிரபஞ்சத்துடன் நகர்வதை உணர்கிறேன், நான் பிரபஞ்சத்தில் எதையும் நகர்த்த முடியும் என்று உணர்கிறேன், ஆனால் முரண்பாடாக எதையும் நகர்த்த முடியாது. சில மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வந்துள்ளன.

மருத்துவரீதியாக எனது உடல் முற்றிலும் பொருத்தமாகவும் ஆரோக்கியமாகவும் உள்ளது.

ஆனால் இன்னும் 1 இட்லி சாப்பிட முடியவில்லை. தொடர்ந்து 21 நிமிடம் கூட தூங்க முடியவில்லை. பனி மூடிய மலைகள் மற்றும் பெருங்கடல்களின் இந்த முழுமையான அமைதி, என்னை மிகவும் ஆற்றலுடனும் உயிருடனும் வைத்திருக்கிறது.

கிரகத்தில் நீண்ட காலம் வாழ வேண்டும் என்ற பேராசையும் இல்லை, இந்த கிரகத்தை விட்டு வெளியேற வெறுப்பும் இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Recent News