கஞ்சா என்பது ஒரு மருந்தாகும். அதை போதைக்காக பயன்படுத்துமாறு நான் கோரியதில்லை. மருத்துவ நோக்கங்களுக்காக பயன்படுத்த வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார்.
கஞ்சா செய்கை மூலம் 52 நாடுகள் பில்லியன் கணக்கான டொலர்களை வருமானமாக ஈட்டுகின்றனர்.
கஞ்சா செய்கை தொடர்பில் தாம் வெளியிட்ட கருத்து திரிபுபடுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார்.
ஊடகங்களில் நாங்கள் கூறுவதனை செய்தியாக போடுவதில்லை, ஏதாவது ஓர் சிறு பகுதியை மட்டும் போடுகின்றார்கள் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.