Thursday, January 23, 2025
HomeLatest Newsஇலங்கையில் விரைவாக அதிகரித்துவரும் புற்றுநோய்..! மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் விரைவாக அதிகரித்துவரும் புற்றுநோய்..! மக்களுக்கு எச்சரிக்கை

நாடு முழுவதிலும் ஆண், பெண் இருபாலரிடையேயும் பெருங்குடல் புற்றுநோய் விகிதம் வேகமாக அதிகரித்து வருவதாக இலங்கை புற்றுநோயியல் நிபுணர்கள் கல்லூரி இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் வருடாந்தம் கண்டறியப்படும் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. 

ஆண், பெண் இருபாலருக்குமிடையே பெருங்குடல் புற்றுநோய், குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய் அதிகரித்து வருகின்றது. 

இதற்குக் காரணம் மக்கள் கொழுப்புச் சத்துள்ள உணவுகளை உட்கொள்வதே முக்கிய காரணமாகும். தொடர்ந்து உடற்பயிற்சி செய்யத் தவறினால், அது உடல் பருமனுக்கு வழி வகுக்கிறது என இலங்கை புற்றுநோயியல் நிபுணர்கள் கல்லூரியின் தலைவரும், தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் ஆலோசகரும் மருத்துவ புற்றுநோயியல் நிபுணருமான வைத்தியர் நடராஜா ஜெயக்குமரன் தெரிவித்துள்ளார்.

Recent News