Thursday, December 26, 2024
HomeLatest NewsWorld Newsஅமெரிக்காவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட கனடிய விமானம் !!!

அமெரிக்காவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட கனடிய விமானம் !!!

அமெரிக்காவின் இடோவில் கனடிய விமானமொன்று அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
எயார் கனடா விமான சேவைக்கு சொந்தமான போயிங் 737 மெக்ஸ் ரக விமானமொன்று இவ்வாறு அவசரமாக பாதுகாப்பான முறையில் தரையிறக்கப்பட்டுள்ளது.விமானத்திலிருந்து எச்சரிக்கை ஒளி வெளியானதன் காரணமாக இவ்வாறு விமானி, விமானத்தை அவசரமாக தரையிறக்கியுள்ளார்.மெக்ஸிக்கோவிலிருந்து வான்கூவார் நோக்கிப் பயணம் செய்த விமானம் எச்சரிக்கை ஒளி விளக்கு ஒளிர்ந்த காரணத்தினால் இடோவின் போய்ஸி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

இந்த விமானத்தில் 122 பயணிகளும், 6 விமானப் பணியாளர்களும் பயணம் செய்துள்ளனர். அவசரமாக தரையிறக்கப்பட்ட போதிலும் விமானத்தில் பயணம் செய்தவர்களுக்கு காயங்கள் ஏற்படவில்லை எனவும் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. போயிங் ரக விமானங்கள் அண்மைய நாட்களாக சில தொழிநுட்ப கோளாறுகளை சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recent News