Saturday, January 25, 2025
HomeLatest Newsஎலிசபெத் மகாராணியின் இறுதி நிகழ்வில் கனேடிய முக்கியஸ்தர்கள்!

எலிசபெத் மகாராணியின் இறுதி நிகழ்வில் கனேடிய முக்கியஸ்தர்கள்!

காலஞ்சென்ற பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிக் கிரியைகளில் பெரும் எண்ணிக்கையிலான கனேடிய முக்கியஸ்தர்கள் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கனேடிய பிரதிநிதிகள் குழுவிற்கு பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ மற்றும் ஆளுனர் நாயகம் மேரி சிமோன் ஆகியோர் தலைமை தாங்க உள்ளனர்.

இன்றைய தினம் இந்தப் பிரதிநிதிகள் பிரித்தானியா நோக்கிப் புறப்பட்டுச் செல்ல உள்ளதாகவும், அனைவரும் ஒரே விமானத்தில் செல்வார்களா அல்லது வெவ்வேறு நேரங்களில் செல்வார்களா என்பது பற்றி அறிவிக்கப்படவில்லை.

முன்னாள் ஆளுனர் நாயகங்களான மிச்செல் ஜேன், டேவிட் ஜோன்சன் ஆகியோர் பிரித்தானிய விஜயம் செய்ய உள்ளனர்.

மேலும் முன்னாள் பிரதமர்களான ஸ்டீவன் ஹார்பர், போல் மார்டின், கிம் கெம்பல் மற்றும் ஜீன் செரட்டீன் ஆகியோரும் மகாராணியின் இறுதிக் கிரியைகளில் பங்கேற்க உள்ளனர்.

பழங்குடியினத் தலைவர்கள் சிலர் இறுதிக் கிரியைகளில் பங்கேற்கும் குழுவில் உள்ளடகப்பட்டுள்ளதாக அரசாங்க வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்களுக்கு மேலதிகமாக விளையாட்டு வீர, வீராங்கனைகள், நடிக நடிகையர், பிரித்தானியாவிற்கான கனேடிய உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட பலரும் மகாராணியின் இறுதிக் கிரியைகளில் பங்கேற்க உள்ளனர். 

Recent News