Tuesday, December 24, 2024
HomeLatest Newsகனடாவின், காலநிலை குறித்து அவசர எச்சரிக்கை!!

கனடாவின், காலநிலை குறித்து அவசர எச்சரிக்கை!!

கனடாவின், சில பகுதிகளில், சீரற்ற காலநிலை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நியூ பிரவுன்ஸ்விக், நோவா ஸ்கோட்டியா மற்றும் பிரின்ஸ் எட்வர்ட் தீவுகள் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக, நோவா ஸ்கோட்டியா மற்றும் பிரின்ஸ் எட்வர்ட் தீவுகளில் பனி மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

வெள்ளம் ஏற்படக்கூடிய சாத்தியங்களும் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, நியூ பிரவுன்ஸ்விக் பகுதியில் கூடுதலாக பனிப்பொழிவுடன் பலத்த காற்று வீசும் சாத்தியங்கள் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வாகன சாரதிகள் மிக அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. 

Recent News