Monday, January 27, 2025
HomeLatest Newsஇலங்கைக்கான பயண ஆலோசனை தளர்த்திய கனடா!

இலங்கைக்கான பயண ஆலோசனை தளர்த்திய கனடா!

இலங்கைக்கான பயண ஆலோசனையை கனடா தளர்த்தியுள்ளது.

இலங்கைக்கான பயண ஆலோசனையை புதுப்பித்து இலங்கையை செம்மஞ்சள் பட்டியலில் இருந்து மஞ்சள் நிற பட்டியலுக்கு குறைத்துள்ளது.

முன்னதாக இலங்கைக்கு அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறு கனடா தமது நாட்டு பிரஜைகளுக்கு அறிவுறுத்தியிருந்தது.

அதனை தற்போது தளர்த்தி அதிக அவதானத்துடன் செயற்படுமாறு தமது நாட்டு பிரஜைகளுக்கு கனடா தெரிவித்துள்ளது.

இலங்ககையில் எரிபொருள், உணவு, மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு தொடர்ந்தும் தட்டுப்பாடு நிலவுவதாகவும் இதன் காரணமாக இலங்கை மஞ்சள் பட்டியலில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஓகஸ்ட் மாதத்துக்கு பின்னர் பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, பிரித்தானியா மற்றும் நோர்வே உட்பட பல ஐரோப்பிய நாடுகள் இலங்கைக்கான பயண கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளன.

Recent News