Tuesday, May 13, 2025
HomeLatest NewsWorld Newsபயணிகளுடன் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து..!!மூன்று பேர் உயிரிழப்பு..!! ஆறு பேர் படுகாயம்..!!

பயணிகளுடன் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து..!!மூன்று பேர் உயிரிழப்பு..!! ஆறு பேர் படுகாயம்..!!

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்தொன்று பாலத்தில் இருந்து கவிழ்ந்து ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.எவ்வாறெனில் மொய்கா ஆற்றின் மேம்பாலத்தில் பயணிகளுடன் வந்துக் கொண்டிருந்த பேருந்தொன்றே இவ்வாறு கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி ஆற்றில் கவிழ்ந்துள்ளது.

இந்த பேருந்தில் மொத்தம் 20 பேர் பயணித்துள்ள நிலையில் மூன்று பேர் உயிரிழந்துடன் ஆறு பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மீட்கப்பட்ட நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் தண்ணீரில் மூழ்கிய பேருந்தில் இருந்து 12 பேரை அவசர உதவியாளர்களே மீட்டுள்ளனர்.மீட்பு பணி முடிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளதுடன் பேருந்து விபத்தில் சிக்கிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recent News